இந்த நேரத்தில் தங்களது முக்கிய கூட்டாளி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் என அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மரியா கொரினா மச்சாடோ தெரிவித்துள்ளார்.
தென் அமெரிக்க நாடான வெனிசுவேலாவில் நிக்கோலஸ் மதுரோ தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது.
இந்த ஆட்சி தங்கள் நலன்களுக்கு எதிராக செயல்படுவதாகக் கூறி அமெரிக்கா வெனிசுவேலாவுக்கு பல்வேறு தடைகளை விதித்துள்ளது.
நிக்கோலஸ் மதுரோ அரசை எதிர்த்துப் போராடிவரும் அந்நாட்டு எதிர்க்கட்சி தலைவரான மரியா கொரினாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
நோபல் பரிசை வென்ற அவர், இந்திய ஊடகம் ஒன்றுக்கு விசேட செவ்வி ஒன்றை வழங்கியுள்ளார்.
அந்த செவ்வியில் அவர் கூறியதாவது,வெனிசுவேலாவில் ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தை நோக்கிய அமைதியான மாற்றத்திற்கு இந்திய மக்களும் ஆதரவாக இருப்பார்கள் என்று நம்புகிறோம். வெனிசுவேலா மக்களின் இறையாண்மை விருப்பத்தை மதிக்க நாங்கள் உறுதியாக இருக்கிறோம். மேலும், போராட்டத்தில் இந்த நேரத்தில் எங்கள் முக்கிய கூட்டாளியாக இருப்பவர் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் என அவர் கூறியுள்ளார்.








