கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலை, தற்போது வேகமாக சரிந்து வருகிறது.
அதன்படி, ஒரு வாரத்தில் தங்கத்தின் விலை ரூ.77,000 குறைந்துள்ளது.
உள்ளூர் சந்தையில் முதன்முறையாக, கடந்த வாரம் 24 தங்கம் பவுண் ஒன்று ரூ.410,000 ஆக உயர்ந்தது.
இருப்பினும், நேற்று, 24 கரட் தங்கம் பவுண் விலை ரூ.330,000 ஆகவும், 22 கரட் தங்கம் பவுண் விலை ரூ.302,300 ஆகவும் பதிவானது.
அதன்படி, நேற்று மட்டும் தங்கத்தின் விலை மேலும் ரூ.10,000 குறைந்துள்ளது.
இந்தநிலையில் இன்றைய தினமும்(24) தங்கத்தின் விலை, எவ்வித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.








