தற்போது பாரிய வெங்காயக் கொள்முதல் திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இது குறித்துத் தகவல் வெளியிட்டுள்ள பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் 130 ரூபா என்ற விலை அடிப்படையில் கொள்முதல் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.
இந்தக் கொள்முதல் நடவடிக்கைகள் சதொச, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் மற்றும் தெரிவு செய்யப்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது, தம்புள்ளை, கலாவெவ, பக்கமூன, நாவுல, சிகிரியா மற்றும் கல்கிரியாகம உள்ளிட்ட பல பகுதிகளில் பெரிய வெங்காய அறுவடைகள் இடம்பெற்று வருகின்றன.
இதற்கிடையே, நேற்று பக்கமூன நகரில் பெரிய வெங்காய விவசாயிகள் குழுவொன்று தமது உற்பத்திக்கு நியாயமான விலையைக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சந்தையில் தற்போது வழங்கப்படும் விலைகள் தமது உற்பத்திச் செலவைக் கூட ஈடுசெய்யவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.