காதல் ஒரு போதும் சாதியையோ, மதத்தையோ பார்த்து ஒருவர் மீது ஒருவருக்கு வருவதில்லை. இந்த கட்டமைப்புகளுக்கு எதிரானது. பரந்து விரிந்து கிடக்கும் பூமியில் சிறு இடைவெளியில் நுழைந்து வெளியேறும் காற்றைப்போல காதல் புவியெங்கும் அன்பின் நிமித்தமாய் விரவிக் கிடக்கிறது.
அப்படி தனது நீண்ட நாள் காதலரான இஸ்லாமியர் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டார் இந்த நடிகை. தேசிய விருது பெற்றவர். தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். அவர் யார் தெரியுமா?
அவர் தான் நடிகை பிரியாமணி.
கடந்த 2003 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘எவரே அட்டகாடு’ தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் பிரியாமணி.
அடுத்து பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘கண்களால் கைது செய்’ படத்தில் நடித்தார். ‘அது ஒரு கனாக் காலம்’, ‘மது’ ஆகிய படங்களில் நடித்தார்.
2007 ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் வெளியான ‘பருத்தி வீரன்’ படத்தின் மூலம் பரவலான அடையாளத்தை பெற்றவர் பிரியாமணி.
இவரது நடிப்பு பலராலும் பாராட்டைப் பெற்றது. இந்தப் படத்துக்காகத் தேசிய விருது, தமிழக அரசின் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றார் பிரியாமணி.
தொடர்ந்து ‘மலைக்கோட்டை’, ‘தோட்டா’, ‘ஆறுமுகம்’, ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘ராவணன்’ ஆகிய படங்களில் நடித்த பிரியாமணி, விஜயுடன் தற்போது ‘ஜன நாயகன்’ படத்தில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது.
பிரியாணியை பொறுத்தவரை அவர், கடந்த 2017 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலரான முஸ்தஃபா ராஜ் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.
பெங்களூருவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின்போது இந்த தம்பதிகள் சந்திக்கொண்டனர். இந்த சந்திப்பு காதலாக மாறி பின்பு திருமணம் செய்துகொண்டனர்.
இஸ்லாமியர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார் என்பதற்காக பிரியாமணி மீது சமூக வலைத்தளங்களில் வெறுப்பு பிரசாரம் நடத்தப்பட்டது.
இது தொடர்பாக பிரியாமணி பேட்டி ஒன்றில் கூறுகையில், “எனது திருமணம் குறித்து பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள், ட்ரால்கள், விமர்சனங்கள் எழுந்தன.
இது மிகவும் வருத்தமான ஒன்று. வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்துகொண்டால் அவர்களை ஏன் குறிவைக்கிறார்கள் என தெரியவில்லை. பல முன்னணி நடிகர்கள் மாற்று சாதி, மதத்தவர்களை திருமணம் செய்துள்ளனர்.

உடனே அவர்களின் மதத்துக்கு நாம் மாற வேண்டும் என அவசியமில்லை.
அவர்கள் எந்த மதத்தை சார்ந்தவர்கள் என்பதைப் பொருட்படுத்தாமல் காதலிக்கிறார்கள். ஆனால் ஏன் இதற்கு இத்தனை வெறுப்பு என்று புரியவில்லை.
நான் இஸ்லாமியராக மாறிவிட்டேனா என கேட்கிறார்கள். நான் மாறிவிட்டேன் என்பதை எப்படி தீர்மானிக்கிறார்கள்? திருமணத்துக்கு முன்பே நான் இந்துவாக எனது நம்பிக்கையைப் பின்தொடர்வேன் என்று கூறிவிட்டேன்” என சொல்லியிருந்தார் பிரியாமணி.