மீண்டும் திரைக்கு வரும் ப்ரண்ட்ஸ்: திகதி அறிவிப்பு

Tuesday, 21 October 2025 - 21:11

%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%3A+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
ப்ரண்ட்ஸ் திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2001 ஆம் ஆண்டு இயக்குநர் சித்திக் இயக்கத்தில் நடிகர்கள் விஜய், சூர்யா, வடிவேலு உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ப்ரண்ட்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வணிக ரீதியாக வெற்றிப்படமானது.

இந்த படத்தில் இடம்பெற்ற வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள் இன்றளவிலும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுவருகிறது.

இந்த நிலையில், இந்த திரைப்படத்தை 4K தரத்தில் தொழில்நுட்ப மேம்பாடு செய்து, எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதி திரையிடவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.