ஆர்.கே.ஆர் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ், இந்திய இளம் இயக்குனர் ஷர்வினின் இயக்கத்தில், இலங்கை கலைஞர்களின் கணிசமான பங்களிப்புடன் தயாராகவிருக்கும் "கல்லி" (Gully) திரைப்படத்தின் ஆரம்ப பூஜை நேற்று நடைபெற்றது.
இதில் இலங்கையின் மூத்த கலைஞர்கள் மற்றும் இளம் கலைஞர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பிரபல தென்னிந்திய திரைப்பட இயக்குனரின் மகன் ஷர்வின் இத்திரைப்படத்தை இயக்குகிறார்.
பிரபல தென்னிந்திய திரைப்பட இயக்குனரின் மகன் ஷர்வின் இத்திரைப்படத்தை இயக்குகிறார்.
அத்துடன் இத்திரைப்படத்தின் இயக்குனர் ஷர்வினின் அன்னையும், தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையுமான மீரா சுரேஷ், திரைப்படத்தின் தலைப்புப் பதாகையை உத்தியோகபூர்வமாக திரைநீக்கம் செய்து வெளியிட்டு வைத்தார்.
இத்திரைப்படத்தின் கதாநாயகனாக பிரபல தொழிலதிபரும் கலைஞருமான "கெவின் ராகுல்" நடிக்கவுள்ளார்.
இத்திரைப்படத்தின் கதாநாயகனாக பிரபல தொழிலதிபரும் கலைஞருமான "கெவின் ராகுல்" நடிக்கவுள்ளார்.