காசாவில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கையைக் காரணம் காட்டி, ஜகார்த்தாவில் நடைபெறும் உலக ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க இஸ்ரேல் அணிக்குப் பயண அனுமதி (விசா) வழங்க இந்தோனேசியா மறுத்ததையடுத்து, சர்வதேச ஒலிம்பிக் குழு கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, எதிர்கால ஒலிம்பிக், இளையோர் ஒலிம்பிக் போட்டிகள் அல்லது ஒலிம்பிக் நிகழ்வுகளை நடத்துவது குறித்து இந்தோனேசியாவின் தேசிய ஒலிம்பிக் குழுவுடனான அனைத்து உரையாடல்களையும் முடிவுக்குக் கொண்டுவருவதாக சர்வதேச ஒலிம்பிக் குழு அறிவித்துள்ளது.
அனைத்து நாட்டினரையும் அனுமதிப்பதாக இந்தோனேசியா "போதுமான உத்தரவாதங்களை" வழங்கும் வரை இந்தத் தடை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளையும் கூட்டங்களையும் இந்தோனேசியாவில் நடத்த வேண்டாம் என்று அனைத்து சர்வதேச விளையாட்டு சம்மேளனங்களுக்கும் பரிந்துரைக்கப்படும் என்றும் சர்வதேச ஒலிம்பிக் குழு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், விசா மறுக்கப்பட்டதால், நடப்பு உலக சாம்பியனும், ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்றவருமான ஆர்ட்டெம் டோல்கோப்யாட் (Artem Dolgopyat) உள்ளிட்ட இஸ்ரேல் வீரர்களால் குறித்த போட்டியில் பங்கேற்க முடியாது போயுள்ளது.
இதனையடுத்து, இஸ்ரேலிய ஜிம்னாஸ்டிக்ஸ் சம்மேளனம் அவசர நடவடிக்கையாக விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் முறையிட்டபோதிலும் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இவ்வாறான நிலையில் அனைத்துத் தரப்பினருக்கும் பாகுபாடின்றிப் போட்டிகளில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று சர்வதேச ஒலிம்பிக் குழாம் வலியுறுத்தியுள்ளது.
இதேநேரம், உலகில் அதிக முஸ்லிம் மக்கள்தொகை கொண்ட நாடான இந்தோனேசியா, இஸ்ரேலுடன் முறையான இராஜதந்திர உறவுகளைக் கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.