இசையமைப்பாளர் சபேஷ் காலமானார்

Thursday, 23 October 2025 - 13:17

%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D
பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவரான தேவாவின் சகோதரரும், இசையமைப்பாளருமான சபேஷ் இன்று (23) காலமானார்.

உடல்நலக்குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சபேஷ், அவரது சகோதரர் முரளியுடன் இணைந்து சபேஷ்-முரளி என்ற பெயரில் பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

'சமுத்திரம்', 'மாயாண்டி குடும்பத்தார்', 'தவமாய் தவமிருந்து', 'பொக்கிஷம்' போன்ற பல பிரபலமான திரைப்படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார்.

மேலும், தனது சகோதரர் தேவா இசையமைத்த பல திரைப்படங்களில் இசை உதவியாளராக பணியாற்றியுள்ளதுடன் பல பாடல்களையும் பாடியுள்ளார்.

அண்மையில், தனது சகோதரர் தேவா தேசிய விருது பெறாதமை குறித்து சபேஷ் வருத்தம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.