அளுத்கமவைச் சேர்ந்த குடும்பம் ஒன்றினால் அன்பாக வளர்க்கப்பட்ட நாய் ஒன்றின் இழப்பு அந்த குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ள சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
அந்த நாயின் பெயர் ரெக்ஸ், அதன் வயது ஒன்பதாகும்.ரெக்ஸை வளர்த்த குடும்பத்தினராலும் சுற்றியுள்ள அயலவர்களாலும் ரெக்ஸ் நேசிக்கப்பட்டது.
திடீரென நோய் வாய்ப்பட்ட ரெக்ஸ் நேற்றைய தினம் (22) இவ்வுலகுக்கு விடை கொடுத்தது.
ரெக்ஸின் இழப்பு அனைவரினதும் இதயங்களையும் சோகத்தால் நிரப்பியுள்ளது. ரெக்ஸின் இறுதிக் கிரியை பௌத்த மத சம்பிரதாயங்களுடன் நேற்று நடைபெற்றது.
இறுதி கிரியையின் பின்னர் ரெக்ஸ் வளர்ந்த வீட்டின் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.ரெக்ஸுக்கு வழங்கப்பட்ட அந்த இறுதி மரியாதை பலராலும் பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.









