கணேமுல்ல சஞ்சீவ வழக்கில் தொடர்புடைய 27 சந்தேகநபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

Friday, 24 October 2025 - 20:42

%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2+%E0%AE%9A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B5+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF+27+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் தொடர்புடைய 27 சந்தேகநபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. 
 
பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 
 
இந்த விசாரணையின்போது, நான்கு சந்தேக நபர்கள் திறந்த நீதிமன்றில் நேரடியாக முன்னிலையாக்கப்பட்டனர். 
 
அதே நேரத்தில் தற்போது பூசா சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீதமுள்ள சந்தேக நபர்கள், இணைய தொழில்நுட்பம் ஊடாக மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்