காசாவை இனி ஹமாஸ் ஆட்சி செய்யவே முடியாது என அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களைக் கட்டாயம் கைவிட வேண்டும் என மார்கோ ரூபியோ கூறியுள்ளார்.
காசாவின் எதிர்கால நிர்வாகத்தை இஸ்ரேலும், அதன் நட்பு நாடுகளும் தான் வகுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஆயுதங்களை கைவிட ஹமாஸ் மறுத்தால் அது ஒப்பந்தத்தை மீறுவதாகும் என மார்கோ ரூபியோ குறிப்பிட்டார்.
காசா மக்கள் ஹமாஸ் அமைப்பால் அச்சப்படாமல் இருக்க, அவர்கள் சிறந்த எதிர்காலத்தைப் பெற அமெரிக்கா உதவ விரும்புவதாக அவர் கூறினார்.









