விளையாட்டு விபரீதமானது - பார்வையை இழந்த 14 சிறார்கள்

Friday, 24 October 2025 - 20:59

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81+-+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+14+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+
இந்தியாவின், மத்தியப் பிரதேசம் முழுவதும் கார்பைட் துப்பாக்கி என்ற விளையாட்டு கருவியைப் பயன்படுத்தியதால் 122 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தமது கண்களில் கடும் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
 
அதே நேரத்தில் 14 பேர் தமது பார்வையை இழந்துள்ளனர். 
 
தீபாவளியைக் கொண்டாடும்போது, பெற்றோர்களால், தேசி பட்டாசு துப்பாக்கி என்று பிரபலமாக அறியப்படும் இந்த கருவி, தமது பிள்ளைகளுக்குப் பெற்றுக்கொடுக்கப்படுகிறது. 
 
150 முதல் 200 ரூபாய் வரை விலையைக் கொண்ட, இந்த தற்காலிக சாதனங்கள் பொம்மைகளைப் போல தயாரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன. 
 
எனினும் அவை குண்டுகளைப் போல வெடிக்கின்றன. 
 
இந்தநிலையில்,போபால், இந்தூர், ஜபல்பூர் மற்றும் குவாலியரில் உள்ள மருத்துவமனைகளில், கண் சிகிச்சை மையங்களில், இந்த துப்பாக்கிகளால் காயமடைந்த 26 சிறுவர்கள் அனுமதிக்கப்பட்டனர். 
 
அவர்களில் பெரும்பாலானோருக்கு மீண்டும் பார்வை கிடைக்காது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.