மட்டக்களப்பு மாவட்டத்தில் கடற்றொழிலாளர்களுக்காக வழங்கப்பட்ட மண்ணெண்ணெய்யில் மோசடி இடம்பெற்றுள்ளதாக கடற்றொழிலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்த செயற்பாட்டை வன்மையாகக் கண்டிப்பதுடன் வடக்கு கிழக்கு கடற்றொழில் தொழிற்சங்கங்கள் இணைந்து பாரிய போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக, கிழக்கு மாகாண கடற்றொழில் சங்கத்தின் தலைவர் ரத்தினம் பத்மநாதன் எச்சரித்துள்ளார்.









