இந்தியாவில் ஏதிலிகளாக இருக்கும் இலங்கையர்கள் மீண்டும் நாடு திரும்பினால், இலங்கை அரசு அவர்களை வரவேற்க தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பெருந்தோட்ட மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்திரலிங்கம் பிரதீப் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை கடற்றொழிலை அழிக்கும் தடைசெய்யப்பட மீன்பிடி முறைகளை இரு நாட்டு கடற்றொழிலாளர்களும் முன்னெடுக்கக் கூடாது என சுந்திரலிங்கம் பிரதீப் குறிப்பிட்டார்.
இரு நாட்டு கடற்றொழிலாளர்களுக்கும் இடையில் புரிதல் ஏற்பட வேண்டும் என அவர் கூறினார்.









