'நாங்கள் முன்கூட்டியே எச்சரித்தோம்' - டெல்லி போராட்டம் குறித்து அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட அமெரிக்க தூதரகம்!

Wednesday, 22 July 2026 - 9:23

%27%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87+%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D%27+-+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%21
இந்திய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று கூறி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் மற்றும் மாணவர் அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

'நீட்' வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரியே இந்த தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், டெல்லியில் பிரச்சனை வெடிக்கலாம் என்று கடந்த 17ஆம் திகதியே டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

அதில், இந்தியாவில் வசிக்கும் அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் நேற்றைய தினம் நாடாளுமன்றத்தை நோக்கி போராட்டக்காரர்கள் பேரணி சென்றனர்.

அதன்போது காவல்துறையினர் அவர்கள் மீது தடியடி பிரயோகம் நடத்தினர்.

அத்துடன், இந்த போராட்டத்துக்கு ஆதரவு வெளியிட்டு போராட்டம் நடத்திய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.