மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிர போர் பதற்றத்தின் தாக்கத்தால், உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகள் இன்று மேலும் உயர்வைப் பதிவு செய்துள்ளன.
உலக சந்தை நிலவரப்படி, WTI (West Texas Intermediate) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 88.66 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.
அதேவேளை, சர்வதேச அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 96.45 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
இதனிடையே, இயற்கை எரிவாயு (Natural Gas) விலையும் இன்று உயர்வைக் கண்டுள்ளது.
அதன்படி, இயற்கை எரிவாயுவின் விலை 2.963 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக உலகளாவிய எரிசக்தி சந்தைத் தரவுகள் தெரிவிக்கின்றன.
மத்திய கிழக்கில் நீடித்து வரும் பாதுகாப்பு பதற்றம் மற்றும் விநியோக தடைகள் குறித்த அச்சம் காரணமாக, உலக எரிசக்தி சந்தையில் விலை ஏற்றம் தொடரும் வாய்ப்பு இருப்பதாக சந்தை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.








