செங்கடலில் அதிகரிக்கும் பதற்றம் : சவூதி எண்ணெய் கப்பல்கள் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்

Thursday, 23 July 2026 - 8:43

%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D+%3A+%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B9%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
ஈரானின் ஆதரவு பெற்ற ஏமன் ஹூதி கிளர்ச்சியாளர்கள், தாங்கள் அறிவித்திருந்த கடல் முற்றுகையை மீறியதாகக் குற்றஞ்சாட்டி, செங்கடலில் பயணித்த இரண்டு சவூதி அரேபிய எண்ணெய் கப்பல்கள் மீது ஆளில்லா வானூர்திகள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தகவலை வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

சம்பவத்தால் ஏற்பட்ட சேதம், உயிரிழப்புகள் அல்லது காயமடைந்தவர்கள் தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

மேலும், இந்தக் குற்றச்சாட்டுக்கு சவூதி அரேபிய அதிகாரிகள் இதுவரை பதிலளிக்கவில்லை.

இந்தச் சம்பவம் காரணமாக செங்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பு பதற்றம் மேலும் அதிகரித்துள்ளதுடன், சர்வதேச கடல்சார் போக்குவரத்து மற்றும் எண்ணெய் விநியோக பாதுகாப்பு குறித்த கவலைகளும் தீவிரமடைந்துள்ளன.