யேமனின் பொப் அல்-மந்தப் அமைவிடப் பகுதியில் ஹூதி அமைப்பினர் ஏவுகணைத் தாக்குதல்!

Friday, 14 August 2026 - 1:45

%E0%AE%AF%E0%AF%87%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B9%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%21
யேமனின் மேற்கே அமைந்துள்ள பொப் அல்-மந்தப் நீரிணை (Bab al-Mandab strait) பகுதியைக் இலக்கு வைத்து ஹூதி அமைப்பினர் இரண்டு ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

பொப் அல்-மந்தப் நீரிணைக்கு அருகில் அமைந்துள்ள மோச்சா (Mocha) துறைமுகப் பகுதியை இலக்கு வைத்து இந்த ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

துறைமுகத்தின் கப்பல் தங்குமிடத்தில் (marine berth) இரண்டு பலிஸ்டிக் ஏவுகணைகள் தாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த விபரங்களை அதிகாரிகள் மதிப்பீடு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.