விஜய் அரசாங்கத்தின் வாகனங்கள் எங்களுக்கு வேண்டாம்- உதயநிதி அதிரடி அறிவிப்பு

Saturday, 22 August 2026 - 6:22

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-+%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
தமிழக அரசின் நிதிநெருக்கடியை கருத்தில் கொண்டு, திராவிட முன்னேற்றக்கழகத்தின் 59 சட்டமன்ற உறுப்பினர்களும், தமிழக அரசாங்கம் வழங்கும் சிற்றுந்துகளை பெற்றுக்கொள்வதில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

பொருளாதார ரீதியாக பின்தங்கிய உறுப்பினர்களுக்கு மட்டும், அவர்களின் தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் உள்ள பொருளாதாரத் தரவுகளின் அடிப்படையில் வாகனம் வழங்கலாம் என அவர் கூறியுள்ளார்.

'எனினும் சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி முழுவதும் மக்களைச் சந்திக்க வேண்டியிருப்பதால் வாகனம் அவசியம் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, வாதிட்டார்.

இதேவேளை திராவிட முன்னேற்றக்கழகத்தின் இந்த நடவடிக்கை நிதிச்சுமையை குறைப்பதைவிட அரசியல் ரீதியாக, அந்தக்கட்சியின் மீது நல்லெண்ணத்தை உருவாக்கும் முயற்சியாகவும், மற்ற கட்சிகளுக்கும் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடியதாகவும் பார்க்கப்படுவதாக தமிழக செய்திகள் கூறுகின்றன.