தமிழகத்தின் கரூர் தொகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அரசுப் பணி நியமன ஆணைகளை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
குறித்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது.
இதன்மூலம், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசுப் பணி நியமன ஆணைகளை ரத்து செய்த உயர் நீதிமன்ற உத்தரவு, அடுத்தகட்ட விசாரணை வரை அமுல்படுத்தப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையின்போது இருதரப்பினரின் வாதங்களையும் உச்ச நீதிமன்றம் பரிசீலிக்க உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.









