இலங்கையில் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் கடனட்டை மோசடிகள் மற்றும் காவல்துறை போன்று ஆள்மாறாட்டம் செய்து முன்னெடுக்கப்படும் பண மோசடிகள் குறித்து இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு மற்றும் இலங்கை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளன.
சந்தேகத்திற்கிடமான நடவடிக்கை காரணமாக உங்கள் கடனட்டை முடக்கப்பட்டுள்ளதாகக் கூறி பரப்பப்படும் போலி குறுஞ்செய்திகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் போன்று நடித்து மேற்கொள்ளப்படும் பண மோசடிகள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
உங்கள் கடனட்டை முடக்கப்பட்டுள்ளது, 24 மணித்தியாலங்களுக்குள் அதனைச் சரிசெய்யாவிடில் அது ரத்து செய்யப்படும் என்றவாறு போலி இணைப்புகள் உள்ளடக்கிய குறுஞ்செய்திகள் அனுப்பப்படுகின்றன.
அந்த இணைப்புகளை அழுத்துபவர்கள் தமது தேசிய அடையாள அட்டைஇலக்கம் உள்ளிட்ட தனிப்பட்ட விபரங்களை வழங்கத் தூண்டப்படுகின்றனர்.
பின்னர், மோசடிக்காரர்கள் அந்த விபரங்களைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களின் OTP இலக்கத்தைப் பெற்று வங்கிக் கணக்குகளிலுள்ள பணத்தைத் திருடுகின்றனர்.
வட்ஸ்அப் காணொளி அழைப்புகள் மூலம் காவல்துறை சீருடை அணிந்த நபர்கள் போன்று நடித்து மோசடிகள் அரங்கேற்றப்படுகின்றன.
கைது செய்யப்பட்டுள்ள ஒரு குற்றவாளி உங்கள் அடையாள அட்டையைப் பயன்படுத்தி மோசடி செய்துள்ளார் எனக் கூறி மிரட்டி, கைது செய்யாமல் இருக்க பணத்தை அனுப்புமாறு அவர்கள் வற்புறுத்துகின்றனர்.
ஏதேனும் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் இருப்பின் உடனடியாக இலங்கை CERT (011 269 1062 / incidents@cert.gov.lk) அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு அல்லது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப்பிரிவுக்கு முறைப்பாடு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Latest News
துப்பாக்கி உரிமங்களைப் புதுப்பிப்பதற்கான காலக்கெடு: பாதுகாப்பு அமைச்சு அவசர அறிவிப்பு
Local
30 January 2026
305 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரெட்டுகள் தீயிட்டு அழிப்பு: பயணிகளுக்குச் சுங்கம் கடும் எச்சரிக்கை
Local
30 January 2026
இந்தோனேசியாவில் பரபரப்பு: திருமணத்திற்கு புறம்பான உறவு மற்றும் மதுபாவனைக்காக 140 கசையடிகள்
Local
30 January 2026
கடனட்டை முடக்கம் மற்றும் போலி அழைப்புகள்: பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை
Local
30 January 2026
இலங்கை காவல்துறையில் 32,000 வெற்றிடங்கள்: விரைவில் 10,000 பேர் ஆட்சேர்ப்பு
Local
30 January 2026
மோல்டோவா வேலைவாய்ப்பு மோசடி: பொதுமக்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அவசர எச்சரிக்கை
Local
30 January 2026
டிட்வா சூறாவளி நிவாரணம்: நஷ்டஈடு வழங்கும் பணிகள் இறுதி கட்டத்தில்
Local
30 January 2026
60 வீதமான போக்குவரத்து ஓட்டுநர்கள் போதைப்பொருளுக்கு அடிமை - அமைச்சர் பிமல் ரத்நாயக்க எச்சரிக்கை
Local
30 January 2026
நவீன தொழில்நுட்பத்துடன் கல்வித்துறையில் பாரிய மாற்றம் - பிரதமர் அறிவிப்பு
Local
30 January 2026
Grok AI மூலம் 30 இலட்சம் படங்கள் திருட்டு - ஈலோன் மஸ்க்கின் எக்ஸ் தளத்திற்கு தடை வருமா?
Local
30 January 2026