ஹப்புத்தளை மற்றும் அதன் சுற்றுப்புறக் கிராமங்களில் இன்று காலை முதல் கடும் பனிமூட்டம் நிலவி வருகின்றது.
இதனால் அப்பகுதியின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், பிரதான வீதிகளில் போக்குவரத்து மேற்கொள்வதில் பெரும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.
குறிப்பாக, ஹப்புத்தளை நகரை அண்டிய பகுதிகளில் பனிமூட்டம் சடுதியாக அதிகரித்துள்ளதால், வீதியில் எதிரே வரும் வாகனங்களைக்கூட இனங்காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை கருத்திற் கொண்டு, விபத்துக்களைத் தவிர்க்கும் நோக்கில் ஹப்புத்தளை காவல்துறை சாரதிகளுக்கு விசேட அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
பெரகலையிலிருந்து ஹப்புத்தளை நோக்கி பயணிக்கும் வாகனங்கள், பண்டாரவளையிலிருந்து ஹப்புத்தளை நோக்கி வரும் வாகனங்கள், வெலி மடை ஊடாக ஹப்புத்தளை நகரிற்குள் நுழையும் வாகனங்களுக்கு இந்த அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட வீதிகளைப் பயன்படுத்தும் சாரதிகள், வாகனங்களின் முகப்பு விளக்குகளை (Headlights) ஒளிரவிட்டவாறு, மிகுந்த அவதானத்துடன் மிகக் குறைந்த வேகத்தில் வாகனங்களைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மலைப்பாங்கான வளைவுகளில் பனிமூட்டம் காரணமாக வீதி வழுக்கும் தன்மை காணப்படலாம் என்பதால், பொதுமக்களும் பயணிகளும் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Latest News
லெபனானில் இஸ்ரேலின் கோரத் தாண்டவம்!" – ஒரே நாளில் 28 பேர் பலி!
Local
01 May 2026
15 வயது சிறுமிக்கு நீதி - கருக்கலைப்புக்குக் காலக்கெடு வேண்டாம்!
Local
01 May 2026
ஆசிரியைகளின் புகைப்படங்களை ஆபாசமாக மாற்றிய மாணவர்கள் கைது!
Local
01 May 2026
படிதார் ஆட்டமிழப்பு சர்ச்சை– நடப்பு செம்பியனுக்கு நேர்ந்த கதி!
Local
01 May 2026
ஹப்புத்தளையில் கடும் பனிமூட்டம்: வாகனச் சாரதிகளுக்கு காவல்துறை விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!
Local
30 April 2026
நாளை வானிலையில் இடம்பெறவுள்ள மாற்றம்
Local
30 April 2026
மனிதாபிமானப் பணியாளர்கள் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்த வேண்டும்
Local
30 April 2026
செம்மணியில் தொடரும் அகழ்வுப்பணிகள் - வெளிப்பட்ட ஒரு மனித என்புக்கூடு
Local
30 April 2026
விண்வெளியில் இருந்து தெரிந்த அமேசான்: நாசா விண்வெளி வீராங்கனை வெளியிட்ட பிரமிக்கத்தக்க புகைப்படம்!
Local
30 April 2026
சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!
Local
30 April 2026