தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றிப் பெரும்பான்மை பலத்துடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக தலைவர் விஜயை, ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்காதமைக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இன்றைய தினம் இரண்டாவது முறையாகவும் ஆளுநரைச் சந்தித்த விஜய், ஆட்சி அமைப்பதற்கான உரிமை கோரலை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில், "பதவியேற்புக்கு முன்னரே பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் வற்புறுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது.
அரசியலமைப்புச் சட்டத்தை மதித்து ஆளுநர் செயற்பட வேண்டும். விஜய் தனது பெரும்பான்மையைச் சட்டமன்றத்திலேயே (சபையில்) நிரூபிப்பதற்கு ஆளுநர் போதிய அவகாசம் வழங்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், ஆளுநரின் நடவடிக்கையை விமர்சித்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ் தனது 'எக்ஸ்' (X) தளத்தில்,
"ஆளுநரின் இச்செயற்பாடு அரசியலமைப்புக்கு முரணானது. எமக்குள்ளே அரசியல் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் விஜய்க்கு மக்கள் ஆணை கிடைத்துள்ளது. சட்டசபையில் தனது பலத்தை நிரூபிக்க அவருக்கு உரிய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையில், "மக்கள் தவெகவைத் தனிப்பெரும் கட்சியாகத் தெரிவு செய்துள்ளனர். எனவே, குழப்பங்களுக்கு இடமளிக்காமல் விஜயைப் பதவியேற்க ஆளுநர் அனுமதிக்க வேண்டும். இதுவே முறையானது" எனத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆட்சி அமைப்பதில் ஏற்பட்டுள்ள இந்த இழுபறி நிலை காரணமாக அரசியல் களம் சூடுபிடித்துள்ளதோடு, ஆளுநரின் அடுத்தகட்ட நகர்வு குறித்து அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
Latest News
இரண்டு ஆண்டுகளின் பின் டொலரின் பெறுமதி 324 ரூபாயைக் கடந்தது: இலங்கையின் வெளிநாட்டு இருப்புக்கு பாரிய அச்சுறுத்தல்
Local
07 May 2026
தவெகவை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும்: ஆளுநருக்கு தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் எச்சரிக்கை!
Local
07 May 2026
கல்முனை - சாய்ந்தமருது விவகாரத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு: ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர்
Local
07 May 2026
விஜய்யைப் பதவியேற்க அனுமதிப்பதே ஜனநாயகம் – ஆளுநரின் நடவடிக்கைக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்
Local
07 May 2026
தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவா? : விசிக, இடதுசாரிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!
Local
07 May 2026
118 உறுப்பினர்களின் ஆதரவின்றிப் பதவியேற்பு இல்லை: விஜய்க்கு ஆளுநர் திட்டவட்டமான பதில்
Local
07 May 2026
'ஒபரேஷன் சிந்தூர்' ஓராண்டு நிறைவு - சமூக ஊடகங்களின் முகப்பு படங்களை மாற்றி பிரதமர் மோடி பெருமிதம்!
Local
07 May 2026
வாகன இலக்கத்தகடுகள் தொடர்பில் வெளியான அறிவித்தல்
Local
07 May 2026
பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் அதிகரிப்பு : தீர்வு காண சர்வதேச உதவியை நாடுகிறது இலங்கை!
Local
07 May 2026
பெரும்பான்மையை பேரவையில்தான் நிரூபிக்க வேண்டும், ராஜ்பவனில் அல்ல - கமல்ஹாசன்
Local
07 May 2026