General07 June 2026

புதிய உயர்கல்வி கொள்கை வரைவு - பொதுமக்கள் கருத்துக்களைச் சமர்ப்பிக்க கல்வி அமைச்சு அழைப்பு

முன்மொழியப்பட்டுள்ள புதிய உயர்கல்வி கொள்கை தொடர்பான பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, பொதுமக்கள் தங்களது கருத்துக்களை இணையத்தளம் ஊடாக சமர்ப்பிப்பதற்கான கேள்விக்கொத்து ஒன்று அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்தப் புதிய உயர்கல்வி கொள்கையை உருவாக்கும் முதற்கட்டமாக, கல்வித்துறை சார்ந்த பல்வேறு தரப்பினரிடமிருந்துஏற்கனவே கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்தே தற்போது பொதுமக்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்வதற்கான இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes