பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பாடகர் சங்கீத்ஷனை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், தவறினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தழுவிய ரீதியில் பாரிய போராட்டங்கள் வெடிக்கும் என்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் எச்சரித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (09) இடம்பெற்ற அவசரகாலச் சட்டம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஜே.ஆர். ஜயவர்தனவின் அடக்குமுறைப் பாதையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பயணிக்கக் கூடாது என்றும் அவர் இங்கு வலியுறுத்தினார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் ஊடாக நாட்டில் மீண்டும் ஒரு கொடூரமான சூழல் உருவாகத் தொடங்கியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் வைத்து, கிளிநொச்சி உதயநகர் கிழக்கைச் சேர்ந்த கணேஷ்குமார் சங்கீத்ஷன் என்ற இளம் பாடகர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
1978 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்த பயங்கரவாத தடைச் சட்டம், கடந்த காலங்களில் சிங்கள மற்றும் தமிழ் இளைஞர்களை மிக மோசமாகப் பாதித்திருந்ததாகக் குறிப்பிட்ட சிறீதரன், இன்று ஆட்சியில் இருக்கும் ஜே.வி.பியினரின் 60,000க்கும் மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் படுகொலை செய்யப்படுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் ஜே.ஆர். ஜயவர்தன மற்றும் பிரேமதாச ஆகியோர் இந்தச் சட்டத்தையே கொடூரமாகப் பயன்படுத்தினர் என்பதை நினைவூட்டினார்.
அதேபோல், தமிழ் இளைஞர்களும் பல்லாயிரக்கணக்கில் இந்தச் சட்டத்தினால் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு, சிறைகளில் அடைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர் என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.
அதேபோல், தமிழ் இளைஞர்களும் பல்லாயிரக்கணக்கில் இந்தச் சட்டத்தினால் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு, சிறைகளில் அடைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர் என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.
Latest News
தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வாவுக்கு விளக்கமறியல்
Local
10 June 2026
இந்த ஆண்டு இறுதிக்குள் 31,000 புதிய ஆசிரியர்களை நியமிக்க கல்வி அமைச்சு நடவடிக்கை
Local
10 June 2026
சுரேஷ் சலேவுக்கு ஆதரவான சத்தியாக்கிரகப் போராட்டம் கைவிடப்பட்டது
Local
10 June 2026
சுரேஷ் சலே சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டாரா? ஆராய ஐவர் கொண்ட விசேட சட்டமருத்துவ குழு நியமனம்
Local
10 June 2026
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவு: தனது முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லோரன்ஸ்
Local
10 June 2026
கோட்டாபயவுக்கு பயணத்தடை விதிக்கப்பட்டதிலிருந்து விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்காத சுரேஷ் சலே!
Local
10 June 2026
பாரதிராஜாவின் வரலாற்றுச் சம்பவம் : இலங்கைத் தமிழர் விவகாரத்திற்காக பத்மஸ்ரீ விருதைத் துறந்த இயக்குநர் இமயம்!
Local
10 June 2026
சந்தையில் மீன்களின் விலை அதிகரிப்பு
Local
10 June 2026
ராப் பாடகர் சங்கீத்சன் கைது: கனடா முதல்வர் கண்டனம்
Local
10 June 2026
பாரதிராஜாவுக்கு அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்- ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்
Local
10 June 2026