நாட்டின் சில பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை நிலவக்கூடும் என எதிர்வுக் கூறப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள இற்றைப்படுத்தப்பட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும்.
அதேநேரம், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பிற்பகல் 02 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எதிர்வுக் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், தென் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, களு, நில்வலா உள்ளிட்ட பிரதான ஆறுகளின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதாக நீர்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, முன்னதாக வெள்ள அபாயம் விடுக்கப்பட்ட பகுதிகளில் உள்ள ஆறுகளின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதாக நீர்பாசன திணைக்களத்தின் நதிகள் முகாமைத்துவ பிரிவின் பிரதம பொறியியலாளர் எஸ். ஜெயம் பார்த்தசாரதி தெரிவிக்கின்றார்.
Latest News
338 ரூபாவைத் தாண்டியது அமெரிக்க டொலரின் விற்பனை விலை!
Local
16 June 2026
இலங்கையில் இன்று தங்கவிலை அதிகரிப்பு
Local
16 June 2026
புளுமெண்டல் சங்க உள்ளிட்ட இருவருக்கு 90 நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவு!
Local
16 June 2026
"வெளியே எழும் விமர்சனங்களை புறந்தள்ளி விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்துங்கள்" - சூரியவன்ஷிக்கு அநுர தென்னகோன் அறிவுரை!
Local
16 June 2026
300 ரூபாய்க்கும் குறைவான விலையில் கொழும்பு துறைமுகத்திற்கு எண்ணெய் கொண்டுவர முடியும்
Local
16 June 2026
நீர் விநியோகத்தடை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு
Local
16 June 2026
நாட்டில் வேகமாகப் பரவும் டெங்கு: அதி அபாய வலயங்கள் 84 ஆக அதிகரிப்பு!
Local
16 June 2026
முஹர்ரம் மாதத்துக்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று
Local
16 June 2026
வித்யா கொலை வழக்கு: மூவரின் மரண தண்டனையை மீண்டும் உறுதி செய்தது யாழ் மேல் நீதிமன்றம்!
Local
16 June 2026
நாட்டின் சில பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை
Local
16 June 2026