நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்து விமல் வீரவங்ச, உதய கம்மன்பில, திலித் ஜயவீர உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை ஒடுக்குவதற்கு அரசாங்கம் முயல்வதாக ஃப்ரீ லோயர்ஸ் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) மற்றும் காவல்துறையினரைப் பயன்படுத்தி அரசியல்வாதிகளின் பேச்சு சுதந்திரத்தை முடக்க முற்படுவது கண்டிக்கத்தக்கது என அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் கீழ், காவல்துறையினர் நேரடியாக இவ்வாறான வழக்குகளைத் தொடர சட்டத்தில் இடமில்லை எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயற்பட்ட காவல்துறை அதிகாரி ஒருவரை ஒப்பந்த அடிப்படையில் சிஐடி பணிப்பாளராகவும், சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபராகவும் நியமித்து, அரசாங்கத்தை விமர்சிப்பவர்களை மௌனமாக்க நாடகம் ஆடப்படுவதாக அந்த அமைப்பு சாடியுள்ளது.
அரசியலமைப்பின் 14(1)(a) பிரிவின் கீழ் உறுதிப்படுத்தப்பட்டுள்ள மக்களின் அடிப்படை பேச்சுச் சுதந்திரத்தை அரசியல்மயப்பட்ட காவல்துறை நடவடிக்கைகள் மூலம் முடக்க முடியாது எனவும், இந்த முயற்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும் எனவும் ஃப்ரீ லோயர்ஸ் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
Latest News
வாய்ப்பு கிடைத்ததும் எரிபொருள் விலை குறைக்கப்படும் - நளிந்த ஜயதிஸ்ஸ
Local
16 June 2026
தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டம் ஜனாதிபதியிடம் கையளிப்பு: 2030க்குள் 36 பில்லியன் டொலர் இலக்கு
Local
16 June 2026
இஸ்லாமாபாத்தில் ஒவ்வொரு 4 வீடுகளிலும் ஒரு சிறுவர் தொழிலாளி: பாகிஸ்தானில் அதிர்ச்சித் தகவல்
Local
16 June 2026
SLASSCOM National Ingenuity Awards 2026 - ஹிரு தொலைக்காட்சிக்கு மீண்டும் விருது
Local
16 June 2026
வெள்ளை மாளிகையில் தாக்குதல் சதி முறியடிப்பு - பலர் கைது!
Local
16 June 2026
இலங்கை அணியில் உள்வாங்கப்பட வேண்டிய முக்கிய வீரர் குகதாஸ் மாதுலன்: லசித் மாலிங்க புகழாரம்
Local
16 June 2026
சபாநாயகரின் சகோதரரும் அரசாங்கத்துக்கு எதிராக விவசாயிகளுடன் வீதியில்!
Local
16 June 2026
இலங்கையில் முஹர்ரம் மாதத்துக்கான தலைப்பிறை தென்பட்டது!
Local
16 June 2026
தமிழர் பகுதிகளில் மீட்கப்பட்ட ரூ.161 இலட்சம் பெறுமதியான தங்க நகைகளின் அளவீட்டுப் பணிகள் நிறைவு!
Local
16 June 2026
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் அரசியல்வாதிகளை ஒடுக்க அரசாங்கம் முயற்சி: ஃப்ரீ லோயர்ஸ் அமைப்பு கண்டனம்
Local
16 June 2026