General17 June 2026

அஸ்வெசும கொடுப்பனவு நாளை முதல் வங்கி கணக்குகளில் வைப்பு - 10 பில்லியனுக்கும் அதிக நிதி ஒதுக்கீடு!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் தகுதிபெற்றுள்ள பயனாளிகளுக்கான ஜூன் மாதக் கொடுப்பனவுகள் நாளை ( 18) முதல் அவர்களது வங்கி கணக்குகளில் வைப்புச் செய்யப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் தகுதிபெற்றுள்ள 1,373,248 பயனாளி குடும்பங்களுக்கு இக்கொடுப்பனவு கிடைக்கவுள்ளது.

இதற்காக அரசாங்கத்தினால் 10,904,801,250.00 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த தொகையானது 2026.06.18 அன்று (நாளை) பயனாளிகளின் அஸ்வெசும வங்கி கணக்குகளில் நேரடியாக வைப்புச் செய்யப்படும்.

இது தொடர்பான விபரங்களை அறிந்துகொள்ள பொதுமக்கள் நலன்புரி நன்மைகள் சபையின் உத்தியோகபூர்வ இணையதளத்தைப் பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes