நாட்டின் கல்வித் துறையில் நிலவும் தற்போதைய பிரச்சினைகளுக்கு விரைவான மற்றும் பயனுள்ள தீர்வுகளை வழங்கத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்குமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி தொடர்பான நாடாளுமன்ற அமைச்சரவை ஆலோசனைக் குழுக் கூட்டம் அண்மையில் நாடாளுமன்றத்தில் பிரதமரின் தலைமையில் நடைபெற்றபோது இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் உதவி பெறும் பாடசாலைகளின் நிர்வாகச் சிக்கல்கள், ஆசிரியர் இடமாற்றப் பிரச்சினைகள், மாகாண மட்ட பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் கட்டுமானப் பணிகளின் தற்போதைய நிலை, தொழிற்கல்வித் துறையில் காணப்படும் சவால்கள் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டன.
இவ்விடயங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கங்களைக் கேட்டறிந்த பிரதமர், நிலவும் பிரச்சினைகளுக்குத் துரிதமாக தீர்வு காண்பதுடன், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் விரைவுபடுத்துமாறு வலியுறுத்தினார்.
மேலும், அமைச்சரவை ஆலோசனைக் குழுவின் கீழ் அமைக்கப்பட்டுள்ள துணைக் குழுக்களின் செயற்பாடுகள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்தும் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.
அத்துடன், கல்வித் துறையில் தற்போது எதிர்நோக்கப்படும் பல்வேறு சவால்கள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கவனத்திற்குக் கொண்டு வந்ததுடன், ஆரம்பப் பாடசாலைகள் அமைக்கப்படும் போது தரநிலைகளுக்கு ஏற்ப ஒரே மாதிரியான பொதுவான வரைபடம் மற்றும் கட்டமைப்பு மாதிரியை அறிமுகப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனெவிரத்ன, தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே, கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
Latest News
24 மணித்தியால நீர் வெட்டு : பல பகுதிகளுக்கு நாளை மாலை வரை பாதிப்பு!
Local
24 June 2026
கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் 18 வயது யுவதி கைது
Local
24 June 2026
எரிசக்தி சந்தையில் மாற்றம் : மசகு எண்ணெய் விலையில் சரிவு - இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பு!
Local
24 June 2026
கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் 35 கிலோகிராம் எடையுள்ள போதைப்பொருள் பறிமுதல்
Local
24 June 2026
கல்வித் துறையில் அதிரடி மாற்றம் : பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை காண பிரதமர் ஹரிணி அமரசூரிய உத்தரவு!
Local
24 June 2026
பனாமாவை வீழ்த்தி குரோஷியா வெற்றி!
Local
24 June 2026
நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை!
Local
24 June 2026
தெல்தெனியவில் உடலமாக மீட்கப்பட்ட இயன்முறை சிகிச்சையாளரின் சந்தேகத்திற்குரிய காதலன் யாழ்ப்பாணத்தில் கைது!
Local
24 June 2026
தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் அதிரடி மாற்றம்!
Local
24 June 2026
இலங்கை வான்படைக்கு உலங்கு வானூர்திகளை கையளித்த அமெரிக்க அரசு!
Local
24 June 2026