General24 June 2026

இலங்கை வான்படைக்கு உலங்கு வானூர்திகளை கையளித்த அமெரிக்க அரசு!

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பத்து வுர்-57 சீ ரேஞ்சர் (Tu-57 Sea Ranger - Bell 206) ரக பன்னோக்கு உலங்கு வானூர்திகளை அமெரிக்க அரசாங்கம்,அரசு இலங்கைக் வான்படைக்கு உத்தியோகபூர்வமாக கையளித்தது.

ரத்மலானை வான் படை தளத்தில்; வைத்து இந்த உலங்கு வானூர்திகள் கையளிக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் வான் பயிற்சித் திட்டங்கள், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள், மற்றும் கடல்சார் வான்வெளிப் பாதுகாப்பு ஆகியவற்றை வலுப்படுத்துவதற்காக இந்த உலங்கு வானூர்திகள் கொடையாக வழங்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, அமெரிக்க பசிபிக் வான் படைத்தளபதி ஜெனரல் கெவின் ஷ்னைடர் மற்றும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி விவகார செயலாளர் பால் கபூர் ஆகியோர் முன்னிலையில் இந்த உத்தியோகபூர்வ கையளிப்பு நிகழ்வு நடைபெற்றது.

கடந்த ஜூன் 1 ஆம் திகதியன்று, சிறப்பு சரக்கு வானூர்தியின் மூலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட இந்த உலங்கு வானூர்திகள் வான்படை பொறியியல் பிரிவினரால் வெற்றிகரமாக பொருத்தப்பட்டு சோதனைகள் முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
Related recommendation
Hiru TV News | Programmes