General24 June 2026

தெல்தெனிய பெண் மரணம் : சந்தேகநபரான காதலனின் மனைவியும் கைது

தெல்தெனிய பகுதியில் உடலமாக மீட்கப்பட்ட பெண் பிசியோதெரபிஸ்டின் மரணம் தொடர்பில், சந்தேகநபரான காதலன் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் இன்று (24) காலை யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வலான ஊழல் தடுப்புப் பிரிவினர் மற்றும் யாழ்ப்பாண குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர் மற்றும் அவரது மனைவி இருவரும் உருமாறிய நிலையில், வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணிக்கும் சொகுசுப் பேருந்து ஒன்றில் பயணிப்பதாகக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, ஜி.பி.எஸ் (GPS) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அப்பேருந்து யாழ்ப்பாணத்தை வந்தடைந்த போது அவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சந்தேகநபர்கள் குறித்த தகவல் கிடைத்தவுடன், அது தொடர்பில் யாழ்ப்பாண குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டதாக நுவரெலியா காவல் நிலையத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நுவரெலியா காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு, நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன் அவரை தடுப்பு காவலிலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes