யாழ்ப்பாணம் - சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் ஞானப்பிரகாசம் கிசோர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று (26)முழுமையான நிர்வாக முடக்கல் போராட்டத்தை முன்னெடுக்க சாவகச்சேரி வர்த்தகர்கள் தீர்மானித்துள்ளனர்.
வடக்கு மாகாண ஆளுநரின் உத்தரவின் பேரில், ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரின் விசாரணைப் பரிந்துரையை அடிப்படையாகக் கொண்டு, சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் ஞானப்பிரகாசம் கிசோர் மற்றும் வவுனியா மாநகர சபையின் மேயர் காண்டீபன் ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது.
இந்த நடவடிக்கைக்கு கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ள சாவகச்சேரி வர்த்தகர் சங்கம், குறித்த பதவி நீக்கம் நியாயமற்றதும் தன்னிச்சையானதுமாக இருப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிக்கு நீதியான தீர்வு வழங்கப்பட வேண்டும் என வர்த்தகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அத்துடன், சாவகச்சேரி நகர சபை எல்லைக்குட்பட்ட மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்கள், கடைகள் மற்றும் உணவகங்களையும் முழுமையாக மூடி எதிர்ப்பை வெளிப்படுத்துமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
மண்ணின் உரிமை மற்றும் நீதிக்காக முன்னெடுக்கப்படும் இந்த அறப்போராட்டத்திற்கு இன, மத, மொழி பேதமின்றி அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் என்றும் சாவகச்சேரி வர்த்தகர்கள் கோரியுள்ளனர்.

Latest News
தங்கவிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
Local
26 June 2026
வெப்ப அலை உச்சம் - பிரான்ஸில் மதுபான விற்பனைக்கு கட்டுப்பாடு
Local
26 June 2026
தங்கல்ல பேருந்து விபத்து - 40க்கும் மேற்பட்டோர் காயம்
Local
26 June 2026
சாவகச்சேரி உப தவிசாளர் நீக்கம் - நிர்வாக முடக்கல் போராட்டத்துக்கு அழைப்பு
Local
26 June 2026
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் - இலங்கை அணி 308 ஓட்டங்கள் குவிப்பு
Local
26 June 2026
சமநிலையில் முடிவடைந்த ஜப்பான் - சுவீடன் போட்டி
Local
26 June 2026
தங்காலை - மாத்தறை வீதியில் பேருந்து விபத்து: 12க்கும் மேற்பட்டோர் காயம்
Local
26 June 2026
பேருந்து கட்டண அதிகரிப்பு தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்பு
Local
26 June 2026
வெனிசுவேலா நிலநடுக்கம் - பலியானோர் எண்ணிக்கை 235 ஆக உயர்வு
Local
26 June 2026
தெல்தெனிய சம்பவம் - குண்டசாலை பொறுப்பதிகாரி கைது
Local
26 June 2026