மூடப்படும் அபாயத்தில் சூரிய சக்தி நிறுவனங்கள் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று வாய்மூலக்கேள்வி நேரத்திலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களை முன்னெடுப்பதில் அரசாங்கம் மந்தமான போக்கை பின்பற்றுகின்றன. சூரியசக்தித் துறையில் ஈடுபட்டுள்ள பல நிறுவனங்கள் இன்று மூடப்படும் அபாயத்தில் உள்ளன.
சூரியசக்தித் துறையில் ஆயிரக்கணக்கானோர் நேரடியாகவும் மறைமுகமாகவும் பணியாற்றி வந்த நிலையில், அரசாங்கத்தின் கொள்கைகளால் இந்தத் துறை இன்று பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
நாட்டின் 2030 ஆம் ஆண்டிற்கான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகளை அடைவதில் அரசாங்கத்திடம் முறையான திட்டமிடல் இல்லை . அதற்கு தெளிவான வரைபடம் தேவை.
எரிசக்தி நிறுவனங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகைகள் மற்றும் மின்சாரக் கட்டணக் குறைப்பு ஆகியவற்றால் இந்தத் துறை பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.
அதற்கு பதிலளித்த வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க
சூரியசக்தி உற்பத்தியை மாத்திரம் அதிகரிப்பது போதாது . மின்சார விநியோகக் கட்டமைப்பின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவது அவசியமாகும்.
மின் தேவை குறைவாக இருக்கும் காலங்களில் புதுப்பிக்கத்தக்க மின்சாரம் அதிகரிப்பது கட்டமைப்பில் சிக்கலை ஏற்படுத்தும் என்பதால், அதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகின்றோம்.
மின் தேவை குறைவாக இருக்கும் காலங்களில் புதுப்பிக்கத்தக்க மின்சாரம் அதிகரிப்பது கட்டமைப்பில் சிக்கலை ஏற்படுத்தும் என்பதால், அதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகின்றோம்.
அத்துடன், நாடாளுதன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர முன்வைத்த தரவுகள் தவறானவை என்று குறிப்பிட்ட அமைச்சர் குறிப்பிட்டார். ஆதாரங்களுடன் கூடிய தரவுகளைப் பேசவேண்டியது அவசியமாகும் என அமைச்சர் தெரிவித்தார்.
Latest News
இலங்கை சுங்கத்தின் அசத்தல் சாதனை - அரசின் வருவாய்க்கு வலுவான பங்களிப்பு
Local
26 June 2026
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் சந்திப்பு
Local
26 June 2026
நாடாளுமன்ற ஒம்புட்ஸ்மன் நியமனத்தில் தாமதம் ஏன்? - அரசாங்கத்திடம் எதிர்க்கட்சி கேள்வி
Local
26 June 2026
அமைச்சர்கள் எங்கே? - நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் விசனம்
Local
26 June 2026
மின்சார செலவைக் குறைக்க புதிய முயற்சி - துறைமுகத்தை வந்தடைந்த 7 மின்கல அமைப்புகள்
Local
26 June 2026
மூடப்படும் அபாயத்தில் சூரியசக்தி நிறுவனங்கள்! அரசாங்கத்தின் மந்தமான போக்கை சாடிய தயாசிறி ஜெயசேகர
Local
26 June 2026
சூரியசக்தி நிறுவனங்களின் நிலுவைத் தொகைகள்: ஒரு மாத கால அவகாசம் வழங்கிய வலுசக்தி அமைச்சர்!
Local
26 June 2026
உயர் நீதிமன்ற நீதியரசர் வெற்றிடங்களை நிரப்ப வலியுறுத்தல் – எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கையொப்ப சேகரிப்பு
Local
26 June 2026
நாட்டில் டெங்கு அதிகரிப்பு: அரசாங்கத்தை எச்சரிக்கும் சஜித் பிரேமதாச!
Local
26 June 2026
சரித் அபேசிங்கவின் கட்சிப் பதவிகளை நீக்குவதற்கு தீர்மானம்
Local
26 June 2026