நாட்டில் அதிகரித்து வரும் வீதி விபத்துகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கவனக்குறைவாக வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக உடனடி அபராதங்களை விதிப்பதற்குப் பதிலாக, நேரடியாகச் சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த வருடம் ஜனவரி 1 ஆம் திகதி முதல் நேற்று (26) வரையான காலப்பகுதியில் மாத்திரம் நாடு முழுவதும் 1,292 உயிரிழப்புகளை ஏற்படுத்திய வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன. இந்த விபத்துகளினால் 1,357 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதே காலப்பகுதியில், 2,512 பாரதூரமான விபத்துகளும், 5,059 சிறிய விபத்துகளும் பதிவாகியுள்ளன.
உயிரிழந்தவர்களில் 467 பாதசாரிகளும், 465 உந்துருளி செலுத்துநர்களும் அடங்குவதாக காவல்துறை தரவுகள் தெரிவிக்கின்றன.
அதிவேகமாக வாகனங்களைச் செலுத்துதல் மற்றும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் ஆகியவையே வீதி விபத்துகள் அதிகரிப்பதற்கான பிரதான காரணங்கள் என பிரதி காவல்துறை மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest News
2027 ஆம் ஆண்டில் 6ஆம் தரத்துக்கு புதிய கல்வி மறுசீரமைப்பு: கல்வி அமைச்சு முழுத்தயார்
Local
28 June 2026
அதிவேக மற்றும் கவனக்குறைவான சாரதிக்கு எதிராக உடனடி அபராதம் இல்லை; நேரடியாக சட்ட நடவடிக்கை!
Local
28 June 2026
தியத்தலாவயிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் பேருந்து விபத்து!
Local
28 June 2026
3 வாரங்களாகத் தொடரும் உணவு தவிர்ப்பு: இருதய நோய் பிரிவில் சிகிச்சை; ஜனாதிபதியே உயிருக்கு பொறுப்பு என சலே கடிதம்!
Local
28 June 2026
நாட்டில் டெங்கு அதிகரிப்புக்கு புதிய வகை வைரஸ் திரிபே காரணம்: பிரதமர் தகவல்
Local
27 June 2026
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் புதிய தலைவராக சந்திக எபிடகடுவ தெரிவு!
Local
27 June 2026
பிரான்சில் தகிக்கும் வெப்ப அலை: 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
Local
27 June 2026
ஆப்கானிஸ்தானில் 6.2 மெக்னிடியூட் அளவுக் கோளில் நிலநடுக்கம்: வட இந்தியாவில் உணரப்பட்ட அதிர்வுகள்
Local
27 June 2026
ஹோர்முஸ் நீரிணை விவகாரம்: அமெரிக்காவின் ஒப்பந்த மீறலுக்கு ஈரானின் கடும் எச்சரிக்கை
Local
27 June 2026
12 மில்லியனுக்கும் அதிகமானோருக்கு TIN எண்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்
Local
27 June 2026