General29 June 2026

பொசன் பூரணையை முன்னிட்டு 3,500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில்

பொசன் பூரணையை முன்னிட்டு, இந்த முறை சுமார் 1.5 மில்லியன் முதல் 1.7 மில்லியன் வரையிலான பக்தர்கள் அநுராதபுரத்திற்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கான சமய வழிபாட்டு நிகழ்வுகள் மிஹிந்தலை, அநுராதபுரம் அட்டமஸ்தானம் மற்றும் தந்திரமலை ரஜ மகா விகாரை ஆகிய இடங்களில் மிக விசேடமாக இடம்பெறவுள்ளன.

இதேவேளை பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, 3,500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் விசேட பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

புனிதத் தலங்கள் மற்றும் அதன் சுற்றுப்புறங்களைப் பாதிக்கும் வகையில் செயற்படுவதைத் தவிர்க்குமாறும், சுற்றாடலைத் தூய்மையாகப் பேணுமாறும்
சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றிச் செயற்படுமாறும் பக்தர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Related recommendation
Hiru TV News | Programmes