General05 July 2026

கடும் வெப்ப அலை - மின்சாரத் தேவை அதிகரிப்பு!

அமெரிக்காவின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக, அந்த நாட்டின் 250ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
 
வொஷிங்டன் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான அணிவகுப்புகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் வானவேடிக்கை நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஏற்பாட்டில் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டிருந்த Great American State Fair கண்காட்சி, 38 பாகை செல்சியஸ் வெப்பம் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டது.

அத்துடன், புகழ்பெற்ற வருடாந்த சுதந்திர தின அணிவகுப்பும் பாதுகாப்பு காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் தற்போது நிலவி வரும் Heat Dome என்றழைக்கப்படும் வளிமண்டல உயர் அழுத்தக் காலநிலை காரணமாகவே இந்த கடும் வெப்பம் ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் சில பகுதிகளில் வெப்பச் சுட்டெண் 46 பாகை செல்சியஸ் வரை பதிவாகியுள்ளதுடன், நாட்டின் மொத்த மக்கள் தொகையில் பாதியளவு, அதாவது 18.5 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கடுமையான வெப்பம் காரணமாக மின்சாரத் தேவையும் அதிகரித்துள்ளதால் நியூயோர்க் உள்ளிட்ட பகுதிகளில் மின்கட்டமைப்புகள் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளன.

பல ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரமின்றி தவித்து வரும் நிலையில், பொதுமக்களை மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு மின் விநியோக நிறுவனங்கள் கோரியுள்ளன.
Related recommendation
Hiru TV News | Programmes