General05 July 2026

புதிய கல்விச் சீர்திருத்தம் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக பிரதமர் அறிவிப்பு

அடுத்த வருடம் (2027) நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது திட்டமிட்டபடி நிறைவடைந்து வருவதாக கல்வி அமைச்சரும், பிரதமருமான கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

பாடசாலையிலிருந்து வெளியேறி உலகிற்குச் செல்லும் ஒவ்வொரு பிள்ளைக்கும், அவர்களின் இயல்பான திறன்களுக்குப் பொருத்தமான மற்றும் தொழில் சந்தையில் அதிக தேவையைக் கொண்டுள்ள தொழிநுட்ப மற்றும் தொழிற்பயிற்சிகளை வழங்குவதே இதன் கட்டாய இலக்காகும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

பலாங்கொடை வித்யாலோக மத்திய கல்லூரியின் புதிய மூன்று மாடி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes