International07 July 2026

"AI காரணம் இல்லை" : 4,800 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த மைக்ரோசொப்ட் அளித்த அதிரடி விளக்கம்!

மைக்ரோசொப்ட் (Microsoft) நிறுவனம், தனது உலகளாவிய பணியாளர்களில் சுமார் 2.1 சதவீதம், அதாவது 4,800 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

நிறுவனத்தின் செயல்பாடுகளை மறுசீரமைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சி மற்றும் தொழில்துறையில் ஏற்பட்டுவரும் மாற்றங்களும் இந்த முடிவுக்குப் பின்னணியாக உள்ளதாக நிறுவன நிர்வாகம் விளக்கியுள்ளது.

அதேவேளை, பணிநீக்கம் செய்யப்பட்ட பதவிகள் செயற்கை நுண்ணறிவு மூலம் நிரப்பப்படமாட்டாது என்றும், இது AI காரணமாக மேற்கொள்ளப்பட்ட நேரடி பணிநீக்க நடவடிக்கை அல்ல என்றும் மைக்ரோசொப்ட் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes