General07 July 2026

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை சம்பவம் தொடர்பில் இன்று ஒத்திவைப்பு விவாதம்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் இன்றைய தினம் ஒத்திவைப்பு விவாதமொன்றை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இது தொடர்பான யோசனையை சபையில் முன்வைத்து விடயத்தின் தீவிரத்தன்மையை கருத்திற்கொண்டு 4 மணித்தியால விவாதமொன்றை கோரினார்.

எவ்வாறாயினும், நிலையியற் கட்டளைகளின் பிரகாரம், 3 மணித்தியாலங்களை மாத்திரமே விவாதங்களுக்கு ஒதுக்க முடியும் என ஆளுங்கட்சியின் பிரதம அமைப்பாளர் நளிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டினார்.

அதற்கமைய, பிற்பகல் 3.30 முதல் மாலை 6.30 வரை குறித்த விடயம் தொடர்பில் ஒத்திவைப்பு விவாதமொன்றை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
Related recommendation
Hiru TV News | Programmes