International08 July 2026

அரபிக்கடலில் மாயமான சரக்கு வானூர்தி : 5 பணியாளர்களுடன் தொடர்பு துண்டிப்பு!

ஷார்ஜாவிலிருந்து கராச்சி நோக்கிப் பயணித்த K2 Airways நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 737 ரக சரக்கு வானூர்தியுடனான தொடர்பு அரபிக்கடல் பகுதியில் திடீரென துண்டிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த வானூர்தியில் 5 பணியாளர்கள் பயணித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

வானூர்தியுடனான தொடர்பு எவ்வாறு துண்டிக்கப்பட்டது என்பது குறித்து இதுவரை அதிகாரபூர்வ விளக்கம் வெளியாகவில்லை.

இதையடுத்து வானூர்தியைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Related recommendation
Hiru TV News | Programmes