General12 July 2026

டி20 தரவரிசையில் முதலிடத்தை இழந்தது இந்தியா!

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 4-0 என்ற கணக்கில் இந்தியா பரிதாபமாக இழந்துள்ளது.
 
சவுத்தாம்ப்டனில் நடைபெற்ற ஐந்தாவது மற்றும் இறுதிப் போட்டியில் 56 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து, தொடரைக் கைப்பற்றியது.

புதிய அணித்தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி, இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை.

குறித்த தொடரில் தோல்வியைத் தழுவியதன் மூலம், கடந்த 4 ஆண்டுகளாக டி20 தரவரிசையில் முதலிடத்திலிருந்த இந்தியா, தற்போது அந்த இடத்தைப் பறிகொடுத்துள்ளது.

இதன்படி டி20 தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்து அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது.

முன்னதாக அயர்லாந்துக்கு எதிரான தொடரையும் 2-0 என்ற அடிப்படையில் இந்திய அணி இழந்திருந்தது.

இதன் மூலம், கடந்த ஏழு டி20 போட்டிகளிலும் வெற்றி பெற முடியாமல் இந்திய அணி கடும் சரிவைச் சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes