General12 July 2026

2050இல் 35 மில்லியன் பேருக்கு புற்றுநோய் பாதிப்புகள்: உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கை!

உலகளவில் புற்றுநோய் பாதிப்பு அபாயகரமாக அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது.

தற்போது ஆண்டுக்கு சுமார் 20.6 மில்லியனாக இருக்கும் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை, 2050ஆம் ஆண்டளவில் 35 மில்லியனாக உயரும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதய நோய்களுக்கு அடுத்தபடியாக உலகில் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் நோயாகப் புற்றுநோய் உள்ளது.

மருத்துவத் துறையில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்பட்டிருந்தாலும், புற்றுநோயைத் தடுக்கும் முறைகள், ஆரம்பக்கால கண்டறிதல் மற்றும் அனைவருக்கும் சமமான சிகிச்சை கிடைப்பதில் இன்னும் முன்னேற்றம் தேவைப்படுகிறது.

புற்றுநோய் பாதிப்பைக் கட்டுப்படுத்த தடுப்பு நடவடிக்கைகள், ஆரம்பக்கால பரிசோதனைகள் மற்றும் தரமான சிகிச்சை முறைகளில் அதிக முதலீடு செய்ய வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

தனிநபர்களின் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்களும் இந்தத் சவாலை எதிர்கொள்ள அவசியமானது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes