தமிழ் நாட்டின் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று, அந்த கட்சியின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் முன்வைத்துள்ள கருத்துக்கள் அரசியல் அரங்கில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேருந்து நிலையப் பகுதியில், முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய ராஜகண்ணப்பன், தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார்.
இதன்போது ஆறு, ஏழு மற்றும் எட்டு வயது சிறுவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, அவர்களின் பெற்றோர் தமிழக வெற்றிக் கழகத்துக்கு வாக்களித்ததே திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியை இழக்கக் காரணமாக அமைந்தது" என்று குறிப்பிட்டார்.
மேலும், தமிழக முதல்வர் விஜய் குறித்த தனது பார்வையை வெளிப்படுத்திய அவர், "ஜோசப் விஜய் என்ற பெயரைப் பயன்படுத்தி ஒட்டுமொத்தக் கிறிஸ்தவ வாக்குகளையும், பட்டியல் இன மக்களின் வாக்குகளை ஏமாற்றியும் தமிழக வெற்றிக் கழகம் இந்த வெற்றியைப் பெற்றுள்ளதுஎனத் தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி சமூக வலைதளங்களின் தாக்கம் மற்றும் ஏமாற்று வேலைகளால் நிகழ்ந்தது என திராவிட முன்னேற்றக் கழகத்தினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், ராஜகண்ணப்பனின் இந்தத் கருத்து பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்துக்கு வாக்களித்த மக்கள் தற்போது அதன் விளைவுகளை அனுபவிப்பதாகக் குறிப்பிட்ட அவர், யார் ஆட்சிக்கு வந்தால் மக்கள் நலனுக்காக வேலை செய்வார்கள், யார் செய்ய மாட்டார்கள் என்பதை மக்கள் சிந்தித்து உணர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அத்துடன், சமூக வலைதளங்களில் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார முறைகள் குறித்த விமர்சனங்கள் எழுந்து வரும் சூழலில், ஒரு முன்னாள் அமைச்சரின் இத்தகைய கருத்து, தமிழக அரசியல் களத்தில் அடுத்தகட்ட விவாதங்களுக்கு வித்திட்டுள்ளது.
Latest News
நீதியரசர்கள் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்? அமைச்சரவை பேச்சாளர் விளக்கம்!
Local
14 July 2026
தமிழுக்கு மீண்டும் பெருமை! ஞானபீடம் வென்ற கவிஞர் வைரமுத்து
Local
14 July 2026
இயக்குநர் அவதாரத்தைத் தொடர்ந்து நடிகராகும் ஜேசன் சஞ்சய் : தந்தை விஜய்யின் பாதையில் புதிய பயணம்!
Local
14 July 2026
வேலை செய்வது போல் பாசாங்கு செய்யும் Gen Z தலைமுறை: ஆய்வில் வெளியான தகவல்
Local
14 July 2026
ஆட்சி மாற்றத்திற்கு சிறுவர்கள் காரணமா? - தவெக மீது தொடரும் குற்றச்சாட்டுகள்
Local
14 July 2026
ஜனநாயக விரோத செயற்பாடுகளை அரசாங்கம் நிறுத்த வேண்டும்
Local
14 July 2026
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த மனு ஒத்திவைப்பு
Local
14 July 2026
தங்கத்தின் விலை மீண்டும் சரிவு : நகை வாங்கத் திட்டமிடுபவர்களுக்கு நற்செய்தி!
Local
14 July 2026
உலகை திரும்பிப் பார்க்க வைத்த இந்தியா - பாலைவனத்தில் பிறக்கும் பசுமை மின் நகரம்
Local
14 July 2026
கடந்த 13 நாட்களில் 14,572 டெங்கு நோயாளர்கள் பதிவு
Local
14 July 2026