General17 July 2026

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: உயிரிழந்த இரண்டு சிறைச்சாலை அதிகாரிகளுக்கான இறுதிச் சடங்குகள் இன்று

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்து சமீபத்தில் உயிரிழந்த இரண்டு சிறைச்சாலை அதிகாரிகளுக்கான இறுதிச் சடங்குகள் இன்று (17) நடைபெறுகின்றன.

25 வயதான சிறைச்சாலை காவலர் ஆர்.பி. மதுசார மற்றும் சிறைச்சாலை காவல்துறை சிறப்பு புலனாய்வுப் பிரிவின் அதிகாரியான 39 வயது சந்திக லஷான் குணவர்தன ஆகியோரே அண்மையில் உயிரிழந்தனர்.

இவர்களின் உடலங்களுக்கு வெலிகடை சிறைச்சாலையில் நேற்று இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

நீர்க்கொழும்பு சிறைச்சாலை மோதலில் இதுவரை 10 சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 31 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes