General19 July 2026

ஈரானிய தாக்குதல்களில் அமெரிக்க வீரர்கள் உயிரிழப்பு

ஜோர்தானில் அமைந்துள்ள அமெரிக்கப் படைத்தளம் மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ஆளில்லா வானூர்தி தாக்குதலில், இரண்டு அமெரிக்கப் படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
 
அமெரிக்கக் கட்டளைத் தலைமையகம் இதனைத் தெரிவித்துள்ளது.
 
இந்தத் தாக்குதலில், நான்கு வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுத் திரும்பியுள்ளனர். 
 
ஆனால் ஒரு வீரர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஈரான், குவைத் மற்றும் பஹ்ரைனிலும் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
அதேசமயம் அமெரிக்கா, ஈரானின் குடிமக்களுக்கான உட்கட்டமைப்புகளைத் தாக்குவதாகக் குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றது.
 
இந்தநிலையில், குடிமக்களுக்கான உட்கட்டமைப்புகளைத் தாக்குவது சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என்று சட்ட வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். 
 
வளைகுடா ஒத்துழைப்பு பேரவை, இந்தத் தாக்குதல்களைப் போர்க்குற்றம் என்று கடுமையாகச் சாடியுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes