எல் நினோ தாக்கம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் வரட்சியான காலநிலை நிலவி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, வட மாகாணம், வடமத்திய மாகாணம், ஊவா மாகாணம், கிழக்கு மாகாணம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டம் ஆகியவை எல் நினோ தாக்கத்திற்குள்ளாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலை மிகவும் தீவிரமான எல் நினோ நிலையாக வளர்ச்சி பெற்றால், அடுத்த மாதம் கடுமையான வறட்சி நிலவுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும், அடுத்த ஆண்டு வீழ்ச்சியடையும் மழைவீழ்ச்சி, நீர் உலர்வது மற்றும் வெப்பநிலை அதிகரிப்பு போன்ற பல சுற்றுச்சூழல் சிக்கல்கள் ஏற்படலாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இதன் காரணமாக, பொதுமக்கள் நீர் மற்றும் மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும், தங்களது சுகாதாரம் குறித்து அவதானமாக இருக்குமாறும், வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தாக்கங்களைக் குறைப்பதற்கு முன்கூட்டியே தயாராகுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை, கிழக்கு மாகாணம் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் இன்றைய தினம் உடல் வெப்பம் சற்று அதிகமாக உணரப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
Latest News
ஒரு கையுடன் போராடி சாதனை படைத்த சிறுமிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிம்ரன்
Local
29 July 2026
நுகர்வோர் பாதுகாப்பை உறுதி செய்யும் புதிய திட்டம்!
Local
29 July 2026
தமிழ் மாணவிக்கு உதவிய சிங்கள இளைஞன் - நெகிழ்ச்சியான தருணம்
Local
29 July 2026
மாத்தறையில் உள்ள ஒரு பிளாஸ்டிக் பொருட்கள் கடையில் தீப்பரவல்
Local
29 July 2026
ரசிகர்களுக்காக விபத்து காப்பீட்டை அறிவித்த அல்லு அர்ஜுன்!
Local
29 July 2026
புதிய மெட்ரோ பேருந்துகள் அடங்கிய கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்திற்கு வருகை
Local
29 July 2026
"கொளத்தூர் தொகுதியில் தோல்வி!" – மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சோதனைக்கு அதிரடி உத்தரவிட்ட ஸ்டாலின்
Local
29 July 2026
பிரம்ம முகூர்த்தத்தில் வெளியாகிறது 'ராமாயணா' படத்தின் ட்ரெயிலர்
Local
29 July 2026
அனுமதியின்றி கேரவனுக்குள் நுழைந்த உதவி இயக்குநர் – அதிர்ச்சிகரமான அனுபவத்தை பகிர்ந்த காஜல் அகர்வால்
Local
29 July 2026
ஐ.சி.சி தரவரிசை - வியக்கத்தக்க முன்னேற்றம் கண்ட வைபவ் சூர்யவன்ஷி!
Local
29 July 2026