திருகோணமலை கோணேஸ்வரம் கோயிலுக்குச் சுற்றுலா சென்றிருந்த போது, குரங்கிடம் சிக்கிய ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான கைப்பேசியை மீட்டு, கிளிநொச்சியைச் சேர்ந்த தமிழ் மாணவியின் குடும்பத்தினரிடம் சிங்கள இளைஞர் ஒருவர் ஒப்படைத்துள்ளார்.
அனுராதபுரம் எப்பாவல பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞரொருவரே இந்த நற்செயலில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த நாட்களில் குடும்பத்தினருடன் திருகோணமலை கோணேஸ்வரம் கோயிலுக்குச் சுற்றுலா சென்றிருந்த குறித்த இளைஞன் , அங்கு குரங்கொன்றின் கையில் கைப்பேசி ஒன்று இருப்பதைக் கண்டுள்ளார். உடனடியாக குரங்குடன் போராடி அந்த கைபேசியை அவர் மீட்டுள்ளார்.
விசாரணையில், கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் வழிபாட்டிற்காக வந்திருந்தபோது, மாணவி ஒருவரின் கைப்பேசியை குரங்கு எடுத்துச் சென்றமை தெரியவந்துள்ளது.
மாணவியின் கல்விசார் மிக முக்கியமான பல தகவல்கள் அதில் அடங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
மீட்கப்பட்ட கைப்பேசியில் இருந்த சிம் அட்டையைப் பயன்படுத்தி உரிமையாளரைத் தொடர்பு கொண்ட அவர், காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரியின் பங்குபற்றுதலுடன், நேற்று (28) பிற்பகல் கிளிநொச்சியில் குறித்த மாணவியின் தந்தையிடம் அதனை வெற்றிகரமாக ஒப்படைத்துள்ளார்.
மத நல்லிணக்கத்தையும் மனிதநேயத்தையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், பலரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

Latest News
காஸா போர்: பெற்றோர்களை இழந்த 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள்!
Local
29 July 2026
ஒரு கையுடன் போராடி சாதனை படைத்த சிறுமிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிம்ரன்
Local
29 July 2026
நுகர்வோர் பாதுகாப்பை உறுதி செய்யும் புதிய திட்டம்!
Local
29 July 2026
தமிழ் மாணவிக்கு உதவிய சிங்கள இளைஞன் - நெகிழ்ச்சியான தருணம்
Local
29 July 2026
மாத்தறையில் உள்ள ஒரு பிளாஸ்டிக் பொருட்கள் கடையில் தீப்பரவல்
Local
29 July 2026
ரசிகர்களுக்காக விபத்து காப்பீட்டை அறிவித்த அல்லு அர்ஜுன்!
Local
29 July 2026
புதிய மெட்ரோ பேருந்துகள் அடங்கிய கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்திற்கு வருகை
Local
29 July 2026
"கொளத்தூர் தொகுதியில் தோல்வி!" – மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சோதனைக்கு அதிரடி உத்தரவிட்ட ஸ்டாலின்
Local
29 July 2026
பிரம்ம முகூர்த்தத்தில் வெளியாகிறது 'ராமாயணா' படத்தின் ட்ரெயிலர்
Local
29 July 2026
அனுமதியின்றி கேரவனுக்குள் நுழைந்த உதவி இயக்குநர் – அதிர்ச்சிகரமான அனுபவத்தை பகிர்ந்த காஜல் அகர்வால்
Local
29 July 2026