நாட்டில், கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் டெங்கு காய்ச்சலினால், ஆயிரத்து 509 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், டெங்கு காய்ச்சலினால் 90 ஆயிரத்து 306 பேர் டெங்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், 65 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகளவான டெங்கு நோயாளர்கள் ஜூலை மாதத்தில் பதிவாகியுள்ளதுடன், குறித்த மாதத்தில் 29 ஆயிரத்து 973 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேநேரம், ஜூன் மாதத்தில் 21 ஆயிரத்து 533 பேர் டெங்கு நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, ஒகஸ்ட் மாதத்தின் முதல் 10 நாட்களில் மாத்திரம் நான்காயிரத்து 959 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
மாகாண ரீதியில் மேல் மாகாணமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டின் மொத்த டெங்கு நோயாளர்களில் 52.96 சதவீதமான, 47 ஆயிரத்து 827 பேர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர்.
மாவட்ட ரீதியில் அதிகளவான நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அங்கு 19 ஆயிரத்து 204 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, நாடளாவிய ரீதியில் 119 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள், அதி அபாய டெங்கு வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Latest News
டிட்வா அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 144 வழிபாட்டு தலங்களை சீரமைக்க ரூ. 232 மில்லியன் நிதி ஒதுக்கீடு!
Local
11 August 2026
கிரிந்த துறைமுக மணல் அகழ்வு விவகாரம்: முன்னாள் அமைச்சர் ராஜிதவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை
Local
11 August 2026
ஏதிலிகளாக இந்தியாவிலுள்ள இலங்கையர்கள் மீண்டும் தாயகம் திரும்புவதற்கான ஏற்பாடுகளுக்கு அமைச்சரவை ஒப்புதல்!
Local
11 August 2026
ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா’ படத்திற்கு அஜித் ஆதரவு? – வெளியான சுவாரஸ்ய தகவல்
Local
11 August 2026
இந்த ஆண்டு இதுவரை 90,306 டெங்கு நோயாளர்கள் பதிவு
Local
11 August 2026
தனிமையில் வாடும் சீன ஆண்கள் போலி மணப்பெண்களால் ஏமாற்றப்படுகிறார்கள்
Local
11 August 2026
விஜய்யின் படக்குழுவினருக்கு தொடரும் அரசுப் பதவிகள் – அடுத்தடுத்து கிடைக்கும் முக்கிய நியமனங்கள்
Local
11 August 2026
காவல்துறை உடையில் வந்த சிறுவனை தூக்கிக் கொஞ்சிய முதலமைச்சர் விஜய்: இணையத்தில் வைரலாகும் காணொளி
Local
11 August 2026
கருக்கலைப்புக்கு எதிரான பேரணியில் தமிழ்நாடு சபாநாயகர் பங்கேற்றமையால் சர்ச்சை!
Local
11 August 2026
"உடலுக்குள் ஜின் இருக்கிறது" : தண்ணீரை விட்டு வெளியே வர அஞ்சும் சிறுவன் : பின்னணியில் இருக்கும் உண்மை என்ன?
Local
11 August 2026