International01 September 2026

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,000 ஐ தாண்டியது

நேபாளம் மற்றும் சீனா எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,000 ஐ தாண்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த துயர சம்பவத்தில் மேலும் 4,462 பேர் காணாமல் போயுள்ளனர்.

குறிப்பாக, நேபாளத்தில் மாத்திரம் 987 பேர் உயிரிழந்துள்ளதுடன், 3,916 பேர் காணாமல் போயுள்ளனர்.

இதேவேளை, சீனாவில் 16 பேர் உயிரிழந்துள்ளதுடன், 546 பேர் மாயமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்களைத் தேடும் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்தும் தீவிரப்படுத்தப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Related recommendation
Hiru TV News | Programmes