தென்னிந்திய முன்னணி நடிகைகளில் ஒருவரான த்ரிஷா, பிரபல ஆடை நிறுவனம் ஒன்றின் சேவை குறித்து தனது அதிருப்தியை இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
40 வயதைக் கடந்த பின்னரும் தமிழ் மற்றும் தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாகத் தொடர்ந்து வெற்றிகரமாக வலம் வரும் த்ரிஷா, அண்மைக் காலமாக பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள திரைப்படங்கள் மூலம் கவனம் பெற்றுள்ளார்.
மேலும், அவரது புதிய திரைப்படமும் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பிரபல ஆடை நிறுவனமான Zara-வை குறியிட்டு (Tag) பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், "வீட்டிற்கு டெலிவரி செய்யப்பட்ட ஆடைகளில் உடல் நாற்றம் வீசுகிறது. இந்த துர்நாற்றம் மிகவும் மோசமாக உள்ளது. இது தொடர்ந்து மூன்றாவது முறையாக நடக்கிறது. மிகவும் அருவருப்பாக இருக்கிறது. குறைந்தபட்சம் பொதியிடுவதற்கு (Pack) முன் ஆடைகளைச் சரிபார்த்து அனுப்புங்கள்." என அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
த்ரிஷாவின் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வரும் நிலையில், ஆடை நிறுவனத்தின் தரக் கட்டுப்பாடு குறித்து பலரும் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதுவரை, இந்த விவகாரம் தொடர்பாக Zara நிறுவனம் எந்தவொரு உத்தியோகபூர்வ விளக்கத்தையும் வெளியிடவில்லை.
Latest News
ஆடை நிறுவனம் மீது அதிருப்தி வெளியிட்ட நடிகை த்ரிஷா – இன்ஸ்டாகிராம் ஸ்டோரி வைரல்!
Local
05 July 2026
நீண்ட நாள் கனவு நனவானது - சூப்பர் ஸ்டாருடன் மீண்டும் இணைவது குறித்து சிம்ரன் நெகிழ்ச்சி!
Local
05 July 2026
எல் நினோ தாக்கத்தால் வறண்ட வானிலை தொடரும்: இரு வாரங்களில் தேசிய செயல் திட்டம்!
Local
05 July 2026
கனடா எட்மன்டனில் சந்தேகத்திற்கிடமான மரணம் : தப்பியோடிய கறுப்பு நிற வாகனம் குறித்து காவல்துறையினர் விசாரணை!
Local
05 July 2026
நெடுந்தீவில் முதன்முறையாக எரிபொருள் நிரப்பு நிலையம்
Local
05 July 2026
கதிர்காம ஆலய ஆடி வேல் திருவிழாவிற்கான பாத யாத்திரை ஆரம்பம் !
Local
05 July 2026
டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்கள் குறித்து முறைப்பாடு செய்வதற்கு விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்
Local
05 July 2026
மண் சரிவினால் பாதிக்கப்பட்ட ஹட்டன் - நுவரெலியா வீதி சீரமைப்பு: போக்குவரத்து வழமைக்கு!
Local
05 July 2026
மேல் மாகாணத்தில் இன்று முதல் விசேட டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கை ஆரம்பம்
Local
05 July 2026
அண்டார்டிகாவின் 'இரத்த நீர்வீழ்ச்சி' மர்மம் உடைந்தது – அறிவியலாளர்கள் வெளியிட்ட புதிய விளக்கம்!
Local
05 July 2026